ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனையின் வேண்டுகோள்

59

கடந்த ஜனவரி மாதம் முதல் அந்தமான் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தந்தையை விடுவிக்குமாறு இளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் பதக்கம் வென்ற பாரமி மரிஸ்டெல்லா அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாரமியின் தந்தை, ஒரு மீனவர், இந்திய கடலோர பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தந்தைய இல்லாமல் உணவுக்குக்கூட தமது குடும்பம் கஷ்டப்படுவதாக அவர் தெரிவித்துள்ளதாக சண்டே ஒப்சவர் செய்தி வெளியிட்டுள்ளது.

2018ஆம் இளையோர் ஒலிம்பிக் போட்டியில், 2000 மீட்டர் ஸ்டீபல் ஷேஸ் (steeple chase) என்ற தடைகளுடன் கூடிய ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பாரமி, இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இலங்கை வீராங்கனையாவார்.

ஜப்பானில் 2018 இல் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட சாம்பியன்ஷிப்பிலும் அவர் தங்கப் பதக்கம் வென்றவர்.