இலங்கை குழாம் அறிவிப்பு, குசலுக்கு தலைமை பொறுப்பு

74

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அணியின் தலைவராக குசல் ஜனித் பெரேராவும், உப தலைவராக குசல் மெண்டிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி பங்களாதேஷ் நோக்கி புறப்படவுள்ளது.