கிரிக்கெட் சபைத் தேர்தல்; மதிவானன் உள்ளிட்ட மூவர் விலகல்

61

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பந்துல வர்ணபுர, கே.மதிவானன், மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து விலகியுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் மே 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தலைவர் பதவிக்கு மதிவானனும், பிரிதித் தலைவர் பதவிக்கு பந்துல வர்ணபுரவும், செயலாளர் பதவிக்கு நிஷாந்த ரணதுங்கவும் போட்டியிடவிருந்தனர்.

எனினும், அவர்கள் தேர்தலில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக இன்று இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் குழுவுக்கு அறிவித்துள்ளனர்.