The Family Man Season-2 உண்மையிலேயே தமிழ் போராளிகளை தவறாக சித்தரிக்கிறதா?

102

Amazon Originalஇல் வெளியாகவுள்ள, The Family Man Season-2 முன்னோட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அதேவேளை, எதிர் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது.

The Family Man Season தொடர் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு தொடர். மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடித்த இந்தத் தொடர், ஒரு உளவு அதிகாரியின் சாகசங்களைச் சொல்லும் தொடராக வெளியானது.

Season-1 பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து Season-2 ஜூன் 4ஆம் திகதி வெளியாகுமென Amazon Original அறிவித்துள்ளது.

Season-1இல் பெரும் பகுதி கதை மும்பையில் நடப்பதாகக் காட்டப்பட்ட நிலையில், இந்த Season-2வில் கதையின் ஒரு பகுதி சென்னையில் நடப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், இது தொடர்பாக முன்னோட்டத்தில் இடம்பெற்ற காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த ட்ரெய்லரில் வரும் அதிகாரி ஒருவர், “நமக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின்படி ஐஎஸ்ஐஎஸ்க்கும் அங்குள்ள கலகக் குழுக்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் திட்டமென்ன என்பதைக் கண்டறிய வேண்டும்” என்று பேசுகிறார்.

தமிழ் போராளியைப் போலக் காட்டப்படும் சமந்தா, “நான் எல்லோரையும் சாககொல்லுவேன்” எனத் தெரிவிக்கின்றார்.

இலங்கையின் வரைபடமும் சீருடையில் போராளிக் குழுக்கள் பயிற்சி பெறும் காட்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

இதையடுத்து, இந்த இரண்டாவது Season-2வில் கலகக் குழு என்று சொல்வது, தமிழ் போராளிகளைத்தான் (LTTE) என பலரும் தங்கள் கண்டனங்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் பலர் முன்னோட்டத்தை dislike செய்யுமாறும் கோரிவருகின்றனர். மேலும் பலர் Amazon Originalற்கு சந்தா கட்டுவதை நிறுத்த வேண்டுமென கூறுகின்றனர்.

சமந்தாவின் பாத்திரம் மிகத் தீவிரமான பாத்திரம் என்றும் கதாநாயகனான ஸ்ரீகாந்த் திவாரியின் பாத்திரத்திற்கு மாறுபட்ட பார்வையைக் கொண்ட பாத்திரமெனவும் இதன் இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

“எந்த வன்முறையையும் நியாயப்படுத்தவில்லை. மாறாக அதற்குப் பின்னால் இருக்கும் சித்தாந்தத்தை சொல்கிறோம். நாங்கள் இதில் எந்த நிலைப்பாடும் எடுக்க விரும்பவில்லை. பார்வையாளர்களாகவே இருக்க விரும்புகிறோம். நாளிதழ்களில் வெளிவந்த தகவல்களை வைத்து ஒரு உலகை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார்கள் இயக்குனர்கள்.