60% தடுப்பூசிகள் 3 நாடுகளின் கைகளில்

61

உலக அளவில் இதுவரை விநியோகிக்கப்பட்ட 200 கோடி கொரோனா தடுப்பூசிகளில் 60% மூன்று நாடுகளை மாத்திரமே சென்றடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

60 சதவீதத் தடுப்பூசிகள் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளிடமே சென்றடைந்துள்ளதாக அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கோவெக்ஸ் திட்டம் தடுப்பூசியை உலக நாடுகளிடையே பகிர்ந்தளிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

கோவெக்ஸ் திட்டம் மூலம் சுமார் 127 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

தனி நபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் சுமார் 0.5% தடுப்பூசிகளே சென்றடைந்துள்ளன.

இன்னும் பல நாடுகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், வயதானர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் இதுவரை 10%ற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். (tamil.thehindu.com)