எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய் கசியவில்லை, பொய் என்கிறது அரசு

61

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீவிபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 03 கடல் மைல் தூரத்திற்கு எண்ணெய் கசிவின் படிமங்கள் காணப்படுவதாக கடல்வளங்கள் மற்றும் அதன் அழிவு பற்றி ஆய்வுகளை நடத்திவரும் ஐரோப்பிய கடல் மாசு கண்காணிப்பு அறிக்கை இதனைத் தெரிவித்துள்ளது.

கடல் பகுதிகளில் காலநிலை மாற்றத்தை கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் பயன்படுத்தப்படும் செயற்கைகோள் புகைப்படங்களை ஆதாரமாக வைத்து இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கப்பல் விபத்துக்குள்ளான பகுதியில் 3 கிலோமீற்றர் தூரமளவு எண்ணெய் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை கடற்பரப்பில் நிலவும் காற்றுடனான காலநிலை காரணமாக, எண்ணெய் மேலும் பல பகுதிகளுக்கு பரவலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கப்பல் அமைந்துள்ள பகுதியை சுற்றி 12 கடல் மைல் வரை இந்த எண்ணெக் கசிவு நீடிக்கக்கூடும் அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் அமைந்துள்ள இடத்திலிருந்து எண்ணெய் வடகிழக்கு வரை விரிவடைவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்பதை குறித்த எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பலை கண்காணிப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள ஐந்து கப்பல்களிலும் இருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துவதாக, இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். (tamilwin.com with some inputs)