சொகுசு தொடர்மாடியில் விருந்துபசாரத்தில் ஈடுபட்ட ஒன்பது பேர்

92

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பின் மேல் தளத்தில் விருந்துபசாரத்தில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி ஒன்றுகூடியதுடன், விருந்துபசாரத்தை நடத்திய குற்றச்சாட்டில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர்.