எரிப்பொருள் விலையை அதிகரிக்கத் தீர்மானம்

50

எரிப்பொருள் விலையில் திருத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வாழ்க்கை செலவு தொடர்பிலான அமைச்சரவை இணைக் குழு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எரிப்பொருள் விலை திருத்தத்தை ஏற்படுத்தும் திகதி தொடர்பிலான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டிற்குள் கொவிட் பரவல் காணப்படுகின்றமையினால், எரிப்பொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை சரியாக கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு திகதி அறிவிக்கப்படும் பட்சத்தில், எரிப்பொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக மக்கள் ஒன்று திரளக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமது அரசாங்கம் தொடர்ச்சியாகவே அதிக விலையில் எரிப்பொருளை கொள்வனவு செய்து, குறைந்த விலையில் அதனை மக்களுக்கு வழங்கி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு 2020ஆம் ஆண்டு 33,100 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.

அதனால், குறித்த நிறுவனம் கடனை செலுத்திக் கொள்ள முடியாத, மிகுந்த சிரம நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இதனால், எரிப்பொருள் விலையில் திருத்தத்தை ஏற்படுத்த வாழ்க்கை செலவு தொடர்பிலான அமைச்சரவை இணைக் குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். (trueceylon.lk)