4 வயது சிறுவனுக்கு பியர் அருந்தக் கொடுத்த தந்தை கைது

76

நான்கு வயது சிறுவனுக்கு பியரினை அருந்தக் கொடுத்த அவரது தந்தையான 25 வயது இளைஞர் பேலியகொட பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகநூலில் வௌியான காணொளி ஒன்றின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பேலியகொட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கை சட்டத்தின்படி 18 வயதிற்கு கீழ்பட்ட நபர்களுக்கு மதுபானம் கொடுப்பது மற்றும் விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.