அரசின் முக்கிய பதவிகளில் மாற்றம்

81

இலங்கை துறைமுக அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பதவிக்கு அத்துறையில் தேர்ச்சி பெற்ற நிஹால் கெப்பெட்டிப்பொல நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை துறைமுக அதிகார சபைத் தலைவராக கடமையாற்றிய ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தொழில் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதியிடமிருந்து முன்கூட்டியே ஓய்வு பெறும் கோரிக்கையை அனுஷ பெல்பிட்ட முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தயா ரத்நாயக்கவிற்கு பதிலாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவராக நிஹால் கெப்பெட்டிப்பொல நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச கைத்தொழில் அமைச்சராக செயற்படுவதோடு, துறைமுகங்கள் மற்றும் கப்பற் போக்குவரத்து அமைச்சராக ஹோஹித அபேகுணவர்தன செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.