தெஹிவளை மிருகக்காட்சி சாலையில், சிங்கம், வரிக்குதிரைக்கு கொரோனா

62

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில், சிங்கம் ஒன்றுக்கும், வரிக்குதிரை குட்டி ஒன்றுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுறுதியான சிங்கம் 3 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தமையினால், மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளுக்கமைய, இருமல் மற்றும் தொண்டை நோயினால் சிங்கம் அவதியுறுவது கண்டறியப்பட்டுள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் பணியாற்றும் மூன்று பேரை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.